Time travel
" சொன்னா சொன்னது தான் "
" ........ "
" ........................."
"இந்த மூளை செயல்பட்ற விதமே அற்புதமானது-ங்க. எப்பவோ ? எங்கயோ ? கேட்டத ஞாபகத்துக்கு கொண்டு வருது. மறுபடியும் எங்கிருந்தோ தேடி கண்டுபுடிச்சு அது நடந்தது எங்க ? எப்ப ? -ன்றதையும் சொல்லுது. இது போதாதுன்னு உள்ளயும் இழுத்துட்டுப் போகுது. "
" ....................................... "
" ........................."
( Memory buffering....Sorry for the inconvenience )
நரேஷ் : " என்ன ணா சாப்டாச்சா ? "
காசி : " மெதுவ்வா...சாப்புடுவோம்....என்ன அவசரம் ? இப்ப தான் டீ சாப்ட்டேன் "
வாங்குபவர் : எள்நீ எவ்ளோ-ணே ?
காசி : " முப்பது...நாப்பது..."
வாங்குபவர் : " தண்ணி நெறயா இருக்குற மாரி முப்பது-ல ஒன்னு குடுங்க "
( எதிரே இருந்த மேன்சனில் இருந்து splendor-ல் வந்த ஒருவர், காசி அண்ணாவுக்கு ஒரு கையால் வணக்கம் சொல்லிவிட்டு செல்கிறார். )
நரேஷ் : " யார் ணா அவரு ? உங்களுக்கு வணக்கம் சொல்ட்டு போறாரு. "
காசி : " அவரா ?...ஹாஹா...நம்ம தோஸ்து ப்பா... குடி-ல ப்ரெண்சு ( friends ) ஆயிட்டோம். "
வாங்குபவர் : " இந்தாங்க ணா முப்பது ரூவா "
காசி : " ம்...சரி ப்பா... "
நரேஷ் : "அவரு....குடிப்பாரா... ??? "
காசி : " தம்மும் அடிப்பாரு....இப்ப விட்டுட்டாரு..."
நரேஷ் : " என்ன ணா சொல்றீங்க ? "
காசி : " ஆறு மாசத்துக்கு முன்னாடி, ஒரு நாள் நானு, அவரு, எல்லாரும் சேர்ந்து சரக்கடிச்சிட்டு இருந்தோம். தம் அடிச்சிட்டு யோசிச்சுட்டே இருந்தவரு திடீர்னு 'இனிமே நான் தம் அடிக்கப் போறது இல்ல '-ன்னாரு. நாங்க எல்லாரும் சிரிச்சிட்டோம். ' என்ன சார் இன்னைக்கு கொஞ்சம் ஓவர் ஆயிருச்சா ? '-ன்னு கேட்டேன். ' இல்ல காசி...தம்ம நிப்பாட்டிறலாம்'-னு இருக்கேன்
'என்ன சார் திடீர்னு ?'-னேன்
'சும்மா...தோணுச்சு....அதான்'-னாரு. "
'என்ன சார் திடீர்னு ?'-னேன்
'சும்மா...தோணுச்சு....அதான்'-னாரு. "
வீதியில் சென்ற ஒருவருக்கு வைக்கிறார்.
காசி : " சொன்னா நம்பமாட்ட....இந்த ஆறு மாசத்துல நெறையா தடவ நாங்க தண்ணி அடிச்சிருக்கோம். அவரு ஒரு தம்மு கூட அடிக்கல "
நரேஷ் : " உங்களுக்கு தெரியாம... அவரு அடிச்சிருப்பாரோ என்னாமோ ? "
காசி : " இல்லப்பா. அவர எனக்கு நல்லா தெரியும் பா...சொன்ன சொன்னது தான். அவரு மாதிரி இருந்திருந்தா நான்-லாம் எங்கியோ யோருப்பேன் பா. இந்த சரக்கு கூட விட்றலாம் கழுதைய. தம்மு தான் பா.... விட முடியல....எதாவது வழி பண்ணணும் ப்பா....எதுவா இருந்தாலும் அவர மாரி டக்குனு முடிவெடுத்துரணும் பா "
யாருங்குங்க வேணும் டெக்னாலஜி ??? நினைவுகள் குடுக்குதே...இதுதாங்க time travel....
👌🏻👌🏻😃
ReplyDelete