West ? or East ?
பச்சை வண்ண சாய்வெழுத்துகளை (Green italics) மனதின் அசரீரி எனக் கொள்க.
BOOM.
" யோவ் ! சீக்கிரம் Bill-அ குடுயா. அய்யோ, இவ்ளோ வேகமா Road-அ cross பண்றாளே ! Athlete-ஓட பொண்ணா இருப்பாளோ ? ( Grandma voice : ஓடுகாலிப்பய மவ ! ). முகத்த வேற பாக்கலயே ! "
விளக்கம் :
- ஓடுகாலி = ஓடு + கால் + இ
- ஓடும் கால்களைக் கொண்டவள்/ன்.
( Thank you Wiktionary. )
பில் பைசல் செய்யப்பட்டுவிட்டது.
கால்கள் neutral-லில் இருந்து வேகம் எடுக்கின்றன.
கால்கள் neutral-லில் இருந்து வேகம் எடுக்கின்றன.
" இது வேற ! Push-ஆ ? Pull-ஆ ? தெர்லயே ? First இந்த கதவ ஒடைக்கணும் டா... Office-ல தான் இந்த கதவ வச்சு லூட்டி பண்றானுக-ன்னா நீங்களுமாடா ? போங்கடா ! அய்யோ அவ வேற cross பண்ணிட்டாளே ! "
" Freeze. இப்ப நாம road-அ cross பண்ணப்போறோம். So, Please be careful. Ok ? "
" Cross பண்றதுக்கு முன்னாடி, philosophy 1-க்கும் philosophy 2-க்கும் உள்ள வித்தியாசத்த பா(ர்)த்துருவோம் "
- Dream. Work. Achieve.
- When you walk, Just walk.
Scenario இது தான். இப்ப அந்த Angel ( ஆமா ! இனிமே Angel தான் ) அந்தப்பக்கம் cross பண்ணி போய்டுச்சு.
- சுத்தி நடக்குற எதையும் observe பண்ணாம, அந்த angel முகத்த பாக்குறத மட்டும் goal-ஆ வெச்சிட்டு, road-அ cross பண்ணறதுல மட்டும் Focused-ஆ இருக்குறது ஒரு philosophy.
- அந்த angel சம்பந்தமான எண்ணங்கள் வந்தாலும், identification machine மாதிரி just identify மட்டும் பண்ணிட்டு, சுத்தி நடக்குற ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் ஒரு குழந்தையைப் போல் இயல்பாய் அவதானிப்பது (observe) இன்னொரு philosophy.
ஒரு குழந்தையை அடிச்சு படிக்க வைக்கிறதுக்கும், அந்த குழந்தையே தானா விரும்பி படிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. இல்லயா ?
First சொன்ன philosophy-ல மனதை, நாம் அதிகப்படியாக துன்புறுத்துவதாக
First சொன்ன philosophy-ல மனதை, நாம் அதிகப்படியாக துன்புறுத்துவதாக
நான் பார்க்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து தான். சரியா இருக்கணும்-னு அவசியம் இல்ல.
The revenant, peaceful warrior போன்ற படங்கள் இதுகுறித்து, நமக்கு சில தெளிவுகளை ஏற்படுத்தலாம்.
இன்னொரு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். திருச்சியில் ரயில் ஏறியவர் மதுரை வரைக்கும் தனக்குத்தானே பேசிக்கொண்டு வருகிறார். ( Yes dude ! Just 2 hrs. )
அவரைப் பார்த்து எனக்கு வருத்தமாகவும் இருந்தது ஆச்சரியமாகவும் இருந்தது. ஆழமாக குடியில் மூழ்குவது எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவு எண்ணங்களுக்குள் மூழ்குவதும் ஆபத்தானது.
தொடக்க நிலையிலேயே மனவியலாளரை அணுகி உதவி பெறுதல் நலம். மனத்திற்கு வரும் சின்னச்சின்ன பாதிப்பிற்கு வைத்தியம் பார்க்கத் தயங்கி கூனிக் குறுகினால், தயவுசெய்து உடலுக்கு வரும் சின்னச்சின்ன பாதிப்புகளுக்கும் ( ஜலதோசம் உட்பட... ) கூனிக் குறுகுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
--------------------------------------------
--------------------------------------------
ஆதலால் தாங்கள் கூற வருவது :
"Grandma voice : ஓடுகாலிப்பய மவ !" This is hilarious! 😂
ReplyDelete