முதல் கார் விளம்பரம்
ஆம். செயற்கை நுண்ணறிவு (Artficial Intelligence) திரைக்கதை எழுதிய முதல் விளம்பரம்.
ஐ.பி.எம்-ன் செயற்கை நுண்ணறிவு இயந்திரமான (Artificial intelligence) வாட்சன் தான் இவ்விளம்பரத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளது. 2000-ம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற ''ஒன் டே இன் செப்டம்பர்" இயக்கிய கெவின் மெக்டொனால்டு (Kevin MacDonald) இவ்விளம்பரத்தை லெக்சஸ் (Lexus) கார் நிறுவனத்திற்காக இயக்கியுள்ளார்.
source
படைப்பாற்றலுக்காக கேன்ஸ் விருது பெற்ற பதினைந்து வருடகால
விளம்பரங்களும், பொருள், இடம், செயல்பாடு மற்றும் உணர்ச்சிகள் குறித்து காட்சி வழி ஆழமான புரிதல் பெறும் நிரல் நெறிமுறைகள் (Visual deep learning algorithm) சேகரித்த தரவுகளும் வாட்சனுக்கு உள்ளீடாய் தரப்பட்டன.
மேலும் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகமான நியூ சவுத் வேல்ஸ்-ன் பயன்பாட்டு அறிவியல் துறை சேகரித்த உணர்வு ரீதியான மறுமொழி தகவல்களும் தரப்பட்டன. உணர்வு ரீதியாக சிறந்தவர்களை விளம்பரங்கள் பலவற்றை காணச் செய்தனர். விளம்பரங்களைக் காணும் போது அவர்களுக்கு உண்டான உணர்வுகள், உணர்ச்சியைத் தூண்டும் ஒலிகள் மற்றும் குரல்கள் குறித்தான அனைத்துத் தரவுகளையும் உருவாக்கினர்
இது குறித்து அதன் இயக்குநர் கூறும்போது, திரைக்கதையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு திருத்தங்களையே செய்ததாக விளம்பரத்தின் இயக்குநர் கூறினார். இருந்தும் லெக்சஸ் கார் நிறுவனம் திரைக்கதை குறித்து எந்த ஆவணங்களையும் வெளியிடவில்லை. எனவே வாட்சன் உருவாக்கிய திரைக்கதையில் இருந்து இறுதியில் உருவான விளம்பரம் எந்த அளவு வேறுபட்டு இருக்கிறது என்பதை உறுதியாக கூற முடியவில்லை.

Comments
Post a Comment