உலகின் மிகச்சிறிய டைனோசர்
உலகின் மிகச்சிறிய டைனோசரின் கால்தடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன் ஒவ்வொரு கால்தடமும் ஒரு சென்டிமீட்டர் நீளத்தில் இருக்கின்றன.
source
மாமிசம் உண்ணும் இச்சிறிய டைனோசர், நம் கையில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறியது எனவும், ஒரு குருவி அளவில் இருக்கும் எனவும் கூறுகின்றனர். மேலும், தரையில் நடக்கக் கூடிய இதன் கால்கள் ஒவ்வொன்றும், ஒரு தீக்குச்சி அளவு உயரம் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
110 மில்லியன் ஆண்டுகள் பழமையான இக்கால்தடம், தென்கொரியாவில் இருக்கும் ஒரு அகழ்வாராய்ச்சி தளத்தில் கண்டறியப்பட்டுள்ளது. கிடைத்த கால்தடங்கள், இது ஒரு ராப்டராக இருக்குமென உணர்த்துகின்றன. தரையை நோக்கி இரண்டு கால்விரல்களையும், பூனையின் நகத்தைப் போல் உள்ளிழுத்த மூன்றாவது கால்விரலையும் இது கொண்டுள்ளது. இருந்தும் இக்கால்தடங்கள் குட்டி டைனோசர்களுக்கு உரியதா ? முதிர்ந்த ராப்டார்களுக்கு உரியதா ? என்பதை மட்டும் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உறுதிப்பட கூற முடியவில்லை.
டைனோசர் என்பது டைனோசரியாவைச் சேர்ந்த அனைத்து வகையான ஊர்வனகளையும் உள்ளடக்கியது. இவை 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தற்கான தடயங்கள் உள்ளன. டைனோசர் என்பது செடிகளை உண்ணும் டைனோசர் வகைகளையும் உள்ளடக்கியது.
ராப்டார் என்பது மாமிசம் உண்ணும் டைனோசர். இவை 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. பின்னங்கால்களில் நகங்களைக் கொண்ட இது ஒரு சுறுசுறுப்பான, மாமிசம் உண்ணும் டைனோசர் குடும்பத்தைச் சேர்ந்தது. ராப்டார் என்பது மாமிசத்தை உண்ணும் டைனோசர்களை மட்டும் உள்ளடக்கியது.

source
இதன் பெயர் ட்ரோமியோசோரிஃபார்மிபெஸ் (Dromaeosauriformipes).
ட்ரோமியோசோர் (Dromaeosaur) என்றால் 'ஒருவகையான ராப்டார்'. பார்ம் (form) என்றால் 'வடிவம்'. பெஸ் (pes) என்றால் 'காலடி'. ட்ரோமியோசோரிஃபார்மிபெஸ் என்றால் ராப்டார் வடிவக் காலடி (raptor shaped foot).
ஆமா ! நம்மளோட கீழடி அகழ்வாராய்ச்சி என்ன தான் ப்பா ஆச்சு ???....
source
மாமிசம் உண்ணும் இச்சிறிய டைனோசர், நம் கையில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறியது எனவும், ஒரு குருவி அளவில் இருக்கும் எனவும் கூறுகின்றனர். மேலும், தரையில் நடக்கக் கூடிய இதன் கால்கள் ஒவ்வொன்றும், ஒரு தீக்குச்சி அளவு உயரம் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
110 மில்லியன் ஆண்டுகள் பழமையான இக்கால்தடம், தென்கொரியாவில் இருக்கும் ஒரு அகழ்வாராய்ச்சி தளத்தில் கண்டறியப்பட்டுள்ளது. கிடைத்த கால்தடங்கள், இது ஒரு ராப்டராக இருக்குமென உணர்த்துகின்றன. தரையை நோக்கி இரண்டு கால்விரல்களையும், பூனையின் நகத்தைப் போல் உள்ளிழுத்த மூன்றாவது கால்விரலையும் இது கொண்டுள்ளது. இருந்தும் இக்கால்தடங்கள் குட்டி டைனோசர்களுக்கு உரியதா ? முதிர்ந்த ராப்டார்களுக்கு உரியதா ? என்பதை மட்டும் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உறுதிப்பட கூற முடியவில்லை.
ராப்டார் என்பது மாமிசம் உண்ணும் டைனோசர். இவை 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. பின்னங்கால்களில் நகங்களைக் கொண்ட இது ஒரு சுறுசுறுப்பான, மாமிசம் உண்ணும் டைனோசர் குடும்பத்தைச் சேர்ந்தது. ராப்டார் என்பது மாமிசத்தை உண்ணும் டைனோசர்களை மட்டும் உள்ளடக்கியது.

source
இதன் பெயர் ட்ரோமியோசோரிஃபார்மிபெஸ் (Dromaeosauriformipes).
ட்ரோமியோசோர் (Dromaeosaur) என்றால் 'ஒருவகையான ராப்டார்'. பார்ம் (form) என்றால் 'வடிவம்'. பெஸ் (pes) என்றால் 'காலடி'. ட்ரோமியோசோரிஃபார்மிபெஸ் என்றால் ராப்டார் வடிவக் காலடி (raptor shaped foot).
ஆமா ! நம்மளோட கீழடி அகழ்வாராய்ச்சி என்ன தான் ப்பா ஆச்சு ???....
Comments
Post a Comment