Posts

Showing posts from December, 2018

Google india trends - 2018

Image
இந்த ஆண்டு முடியவிருக்கும் நிலையில், இந்தியர்கள் 2018-ம் ஆண்டில் அதிகமாக தேடியவை குறித்தான பட்டியலை கூகுள் இந்தியா வெளியிட்டுள்ளது. 2018-ம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து குறித்து இந்தியர்கள் அதிகமாக தேடியுள்ளனர். ஆளுமை கள் , திரைப்படங்கள், செய்தி கள் , விளையாட்டு கள் , பாடல்கள், அருகில் இருப்பவை குறித்த தேடல், ஒட்டுமொத்தமாக அதிகம் தேடியவை, 'என்ன ?' மற்றும் 'எப்படி ?' என்ற கேள்விகளுடன் தொடர்புடைய தேடல் கள் என ஒன்பது பிரிவுகளின் கீழ் இந்தியர் களின் தேட ல் களை கூகுள் இந்தியா பட்டியலிட்டுள்ளது. அதிகமாக தேடப்பட்ட ஆளுமைகளின் பட்டியலில், இந்தி நடிகை ப்ரியங்கா சோப்ரா-வை பின்னுக்குத் தள்ளி, மலையாள நடிகை ப்ரியா வாரியர் முதலிடம் பெற்றுள்ளார். ப்ரியங்கா சோப்ராவை மணந்த நிக் ஜோனஸ் இப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ப்ரியங்கா சோப்ரா நான்காம் இடம் பிடித்துள்ளார். அதிகமாக தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த '2.0' முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை, டைகர் ஷெராஃப் நடித்த 'பாஹி 2' மற்றும் சல்மான் கா...