Google india trends - 2018

இந்த ஆண்டு முடியவிருக்கும் நிலையில், இந்தியர்கள் 2018-ம் ஆண்டில் அதிகமாக தேடியவை குறித்தான பட்டியலை கூகுள் இந்தியா வெளியிட்டுள்ளது. 2018-ம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து குறித்து இந்தியர்கள் அதிகமாக தேடியுள்ளனர்.

ஆளுமைகள், திரைப்படங்கள், செய்திகள், விளையாட்டுகள், பாடல்கள், அருகில் இருப்பவை குறித்த தேடல், ஒட்டுமொத்தமாக அதிகம் தேடியவை, 'என்ன ?' மற்றும் 'எப்படி ?' என்ற கேள்விகளுடன் தொடர்புடைய தேடல்கள் என ஒன்பது பிரிவுகளின் கீழ் இந்தியர்களின் தேடல்களை கூகுள் இந்தியா பட்டியலிட்டுள்ளது.

அதிகமாக தேடப்பட்ட ஆளுமைகளின் பட்டியலில், இந்தி நடிகை ப்ரியங்கா சோப்ரா-வை பின்னுக்குத் தள்ளி, மலையாள நடிகை ப்ரியா வாரியர் முதலிடம் பெற்றுள்ளார். ப்ரியங்கா சோப்ராவை மணந்த நிக் ஜோனஸ் இப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ப்ரியங்கா சோப்ரா நான்காம் இடம் பிடித்துள்ளார்.


அதிகமாக தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த '2.0' முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை, டைகர் ஷெராஃப் நடித்த 'பாஹி 2' மற்றும் சல்மான் கான் நடித்த 'ரேஸ் 3' பிடித்துள்ளது.

" சட்டப்பிரிவு 377 என்றால் என்ன ? " என்ற கேள்வி 'என்ன ?' பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், தன் பாலின உறவு குற்றம் எனக் கூறும் சட்டப்பிரிவு 377-ஐ உச்சநீதிமன்றம் ரத்து செய்து வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பு ஒன்றை எழுதியது. 'மீ டூ' என்றால் என்ன ?, கிகி சேலஞ்ச் என்றால் என்ன ? போன்ற கேள்விகளும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது 


"எப்படி வாட்ஸ் அப்-பில் ஸ்டிக்கர்களை அனுப்புவது ? " என்ற கேள்வி
'எப்படி ?' பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் மாதம், ஸ்டிக்கர்களை(Stickers) வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது. " எப்படி
மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பது ? " என்ற கேள்வி இப்பட்டியலில் அடுத்த இடத்தைப் பெற்றுள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை குறித்த தேடல் 'செய்திகள்' பட்டியலில்
முதலிடம் பெற்றுள்ளது. கர்நாடகா தேர்தல் முடிவு மற்றும் ப்ரியங்கா சோப்ரா திருமணம் குறித்த தேடல் 'செய்திகள்' பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. தீபிகா படுகோன் திருமணம் மற்றும் சோனம் கபூர் திருமணம் குறித்த தேடலும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

அதிகமாக தேடிய பாடல்களின் பட்டியலில், 'தில்பர் தில்பர்' என்ற பாடல் முதலிடம் பெற்றுள்ளது. "தாரு பத்நாம்" என்ற பாடல் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. முந்தைய ஆண்டு மூன்றாவது இடம் பிடித்திருந்த 'despacito' பாடல் இந்த ஆண்டு ஒன்பதாம்‌ இடம் பிடித்துள்ளது.

'அருகில் இருப்பவை' குறித்த தேடல் பட்டியலில், மொபைல் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், கேஸ் ஸ்டேஷன் குறித்த தேடல்கள் அடுத்தடுத்த மூன்று இடங்களை பிடித்துள்ளன.

செய்திகள், விளையாட்டு மற்றும் ஒட்டுமொத்தமாக அதிகம் தேடியவை என மூன்று பட்டியலிலும் ஃபிஃபா உலகக்கோப்பை குறித்த தேடலே முதலிடத்தை பெற்றுள்ளது.


Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்