உயிரெழுத்தும் ஓரெழுத்தும்


மல்லாக்கப் படுத்துட்டு அப்டியே யோசிட்டு இருந்தப்ப, தமிழ்ல இருக்குற மாதிரி English-ல ஓரெழுத்துச் சொற்கள் ஏதாவது இருக்கான்னு தேடிப்பார்த்தேன்.  எனக்கு தெரிஞ்சு இல்ல. (இருந்தா சொல்லுங்க மாத்திப்போம்)

தமிழ்-ல இருக்குற ஓரெழுத்துச் சொற்கள் மட்டும் 42 க்கும் மேல.

தமிழின் முதல் எழுத்து 'அ' கூட ஒரு ஓரெழுத்து சொல் தான்.

ஓரெழுத்துச் சொல் என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம்.

நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இங்கு இருக்கிறான் ( I think, therefore I am ~ René Descartes )‌

'சிந்தனை' என்பதன் பொருளை படிப்பவர்களுக்கு உணர்த்த நான்கு எழுத்துக்கள் சேர்ந்து நிற்கவேண்டி இருக்கிறது. தமிழில் சில எழுத்துக்கள் உண்டு. அவை தன்னந்தனியே நின்று ஒரு அர்த்தத்தைத் (meaning)  தந்து, 'Thug' காட்டிவிட்டு போகும். அவை தான் 'ஓரெழுத்துச் சொற்கள்'.


தமிழில் உயிரெழுத்துக்கள் 12.
அதில் 11 எழுத்துக்கள் ஓரெழுத்துச் சொற்கள். ( Ben-Hur )
'ஓ' மட்டும் கிடையாது.

( Ben-Hur படம் ஞாபகம் வருகிறதா ? Oscar-ல் 12 பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு 11 விருதுகளை அள்ளிய படம். இதற்கு அடுத்து தான் Titanic படம். - 14 க்கு 11 விருதுகள் )

அந்த 11 உயிரெழுத்துகளை இங்கு பார்ப்போம்.

அ :
  • அ - சிவன், விஷ்ணு, பிரம்மன் (எல்லாத்துக்கும் 'அ' தான். )
  • அ - எண் '8'-ஐ குறிக்கும் ( எட்டு எட்டா மனுசன் வாழ்வை பிரிச்சுக்கோ ~ வைரமுத்து )
  • சுட்டெழுத்து (சுட்டெழுத்து-ன்னா என்ன ? )

ஆ :
  • ஆ - பசு ( ஆநிரை கவர்தல் )
  • ஆ - ஆன்மா, ஆச்சாரம், நினைவு
( ஆநிரை கவர்தல்- எதிரி நாட்டை தாக்குவதற்கு முன்பாக
எதிரின் நாட்டில் இருக்கும் பசுமாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இரவோடு  இரவாக அவைகளை கவர்ந்து வருவர் )

ஆநிரை - ஆ + நிரை ; ஆ - பசு ; நிரை - கூட்டம். 

இ :
  • இ - பாதி ( 1/2 )என்பதன் தமிழ் வடிவம்.
( Better half-ஐ இனிமே நீங்க 'இ' -ன்னே கூப்பிடலாம் )

ஈ :
  • ஈ - பறக்கும் ஈ ( ஈடா‌... ஈடா‌‌...ஈடா‌‌... ~ நான் ஈ )
  • ஈ - குகை, தேனீ, கொடு ( ஈதல் - ஈ + தல் ; ஈ- கொடு; தல் - தொழிற்பெயர் விகுதி )

உ :
  • உ - சிவன், ஆச்சரியம்,
  • உ - எண் 2-ஐ குறிக்கும்
  • உ - சுட்டெழுத்து

ஊ :
  • ஊ - உணவு , உன், தசை, இறைச்சி

எ :
  • எ - வினா எழுத்து , ஏழு (பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு)

ஏ :
  • ஏ - அம்பு, உயர்ச்சிமிகுதி

ஐ :
  • ஐ - அழகு ( பூக்களை சற்று ஓய்வெடுங்கள்...ஐயென்றால் அது அழகு என்றால் அந்த ஐ-களின் ஐ-அவள் நீயா )
  • ஐ - வியப்பு ( ஐயகோ! அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் ? )
  • தந்தை, தலைவன், இறைவன்.

ஒ :

  • ஒ - மதகு ( திருச்சியின் முக்கொம்பு அணையின் 9வது மதகும் உடைந்தது - https://youtu.be/-de49aIzL_I )


ஔ :
  • பூமி ( அட ! பூமிக்கே தமிழ்ல ஒரு எழுத்துல பேரு இருக்கா... ஔ )
  • ஆனந்தம்.

--------------------------------------------------------------------------------------------
கவனத்திற்கு: '' என்ற எழுத்தை எழுதும்போது,  'ஒள' என்னும் எழுத்தில் இருக்கும் 'ள' என்ற எழுத்தை 'ஒ' விட சிறியதாக எழுத வேண்டும் )
--------------------------------------------------------------------------------------------
எண்களை குறிக்கும் உயிரெழுத்துக்கள்:

  • அ - 8
  • உ - 2
  • எ - 7

                                                        பட உதவி: https://pin.it/2yovu5wqm2p76i



சுட்டெழுத்துக்கள்: 

குறிப்பிட்ட ஒரு பொருளையோ, மனிதரையோ சுட்டிக்காட்ட பயன்படும் எழுத்துக்கள்.

  • அ இ உ
அ - அப்பெண் - அந்த பெண்
இ - இப்பெண் - இந்த பெண்
உ ( தற்போது புழக்கத்தில் இல்லை )
----------------------------------------------------------------------------------------------------------------

ஆதலால் தாங்கள் கூற வருவது:



Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02