Posts

Showing posts from September, 2018

'Sacred games'-ன் தலைப்பிற்கான காரணங்கள் - பகுதி 4

Image
இறுதி எச்சரிக்கை : முன்பே கூறியது போல், Sacred games பார்த்தவர்களும், 'பார்க்க மாட்டேன்'-னு உறுதியா இருப்பவர்கள் மட்டும் படியுங்கள். இனிமே தான் பார்க்கப் போகிறீர்கள் எனில் இப்பொழுதை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிடவும். ஏனெனில் கதையின் முக்கியமான முடிச்சுகளை இக்கட்டுரை சொல்லக்கூடும். ------------------------------------------------------------ Scared games - ன் முதல் இரண்டு தலைப்புகளுக்கான காரணங்கள் இங்கே : https://nagalpakkangal.blogspot.com/2018/09/sacred-games_19.html?m=1 மூன்றாம் & நான்காம் தலைப்பிற்கான காரணங்கள் இங்கே : https://nagalpakkangal.blogspot.com/2018/09/sacred-games_20.html?m=1 ஐந்தாம் & ஆறாம் தலைப்பிற்கான காரணங்கள் : https://nagalpakkangal.blogspot.com/2018/09/sacred-games_21.html?m=1 --------------------------------------------------------- ஏழாம் & எட்டாம் தலைப்பிற்கான காரணங்கள் 7.ருத்ரா ( Rudra ) : கோபம் கொண்டு திரியும் சிவனின் மற்றொரு பெயர்தான் ருத்ரன். Sacred games கதைப்படி, சுலைமான் இசாவின் ஆட்களால் ...

'Sacred games'-ன் தலைப்பிற்கான காரணங்கள் - பகுதி 3

Image
எச்சரிக்கை : முன்பே கூறியது போல், Sacred games பார்த்தவர்களும், 'பார்க்க மாட்டேன்'-னு உறுதியா இருப்பவர்கள் மட்டும் படியுங்கள். இனிமே தான் பார்க்கப் போகிறீர்கள் எனில் இப்பொழுதை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிடவும். ஏனெனில் கதையின் முக்கியமான முடிச்சுகளை இக்கட்டுரை சொல்லக்கூடும். ------------------------------------------------------------ Scared games - ன் முதல் இரண்டு தலைப்புகளுக்கான காரணங்கள் இங்கே : https://nagalpakkangal.blogspot.com/2018/09/sacred-games_19.html?m=1 மூன்றாம் & நான்காம் தலைப்பிற்கான காரணங்கள் இங்கே : https://nagalpakkangal.blogspot.com/2018/09/sacred-games_20.html?m=1 ------------------------------------------------------------------ ஐந்தாம் & ஆறாம் தலைப்பிற்கான காரணங்கள் : 5. சரமா ( Sarama ) : இந்து புராணத்தின் படி, நரகர்களின் ஒரு பிரிவினரான பனியர்களால் கடத்தப்பட்ட பசுக்களை மீட்க இந்திரனுக்கு உதவிய பெண்நாய் தான் சரமா. அந்நாய் பசுக்களை கண்டறிய போராடியது. மேலும் அது தன் உள்ளுணர்வு சார்ந்த அறிவுக்கு பெயர்போனது. Sacred ga...

'Sacred games'-ன் தலைப்பிற்கான காரணங்கள் - பகுதி 2

Image
அபாயம் : முன்பே கூறியது போல், Sacred games பார்த்தவர்களும், 'பார்க்க மாட்டேன்'-னு உறுதியா இருப்பவர்கள் மட்டும் படியுங்கள். இனிமே தான் பார்க்க போகிறீர்கள் எனில் இப்பொழுதை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிடவும். ஏனெனில் கதையின் முக்கியமான முடிச்சுகளை இக்கட்டுரை சொல்லக்கூடும். Scared games - ன் முதல் இரண்டு தலைப்புகளுக்கான காரணங்களை படிக்காதவர்கள் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும். https://nagalpakkangal.blogspot.com/2018/09/sacred-games_19.html?spref=fb&m=1 மூன்றாம் & நான்காம் தலைப்பிற்கான காரணங்கள்... இதோ கீழே... 3. அடாபி வடாபி ( Atapi vatapi ) : இந்து புராணத்தின் படி, அடாபியும் வடாபியும் சகோதரர்கள். தன் வீட்டிற்கு உணவு உண்ண வருமாறு பயணிகளை அடாபி அன்புடன் அழைப்பான். அவர்களும் சம்மதித்து அவன் வீட்டிற்கு விருந்து உண்ணச் செல்வர். வடாபி ஆடாக உருமாறுவான். பின்பு ஆட்டுக்கறியாக விருந்தில் இடம்பெறுவான். அவர்களும் அதை சந்தோசமாக உண்டுவிட்டு அவனது வீட்டில் இருந்து புறப்படுவர். அடாபி தன் சகோதரரான வடாபியை வெளியே வருமாறு அழைப்பான். வடாபி அப்பயணிகளின்...

'Sacred games'-ன் தலைப்பிற்கான காரணங்கள் - பகுதி 1

Image
Scared games -ல, என்னோட கவனத்தை ஈர்த்தது ஒவ்வொரு episode-க்கும் வைக்கப்பட்டுள்ள தலைப்புகள். Season 1 -ல மொத்தம் எட்டு episodes. எட்டு தலைப்புகள். தலைப்புகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம்-னு கூகுள்ள தேடும் போது கிடைத்ததை இங்கே பதிவிட்டிருக்கிறேன். ( தமிழில் இயக்குநர் பிரம்மன் தன்னுடைய முதல் படத்திற்கு திருக்குறளில் ஒரு அதிகாரத்தின் பெயரை இட்டார். 'குற்றம் கடிதல்' ) Sacred games பார்த்தவர்களும், 'பார்க்க மாட்டேன்'-னு உறுதியா இருப்பவர்கள் மட்டும் படியுங்கள். இனிமே தான் பார்க்க போகிறீர்கள் எனில் இப்பொழுதை நிறுத்திவிட்டு சென்றுவிடவும். ஏனெனில் கதையின் முக்கியமான முடிச்சுகளை இக்கட்டுரை சொல்லக்கூடும். முதல் இரண்டு தலைப்புகளுக்கான காரணத்தை மட்டும் இங்கே பதிவிடுகிறேன். 1. அஸ்வத்தாமா ( Aswatthama ) : அஸ்வத்தாமா என்பவர் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு எதிராக போராடிய முக்கிய கதாபாத்திரம். (Note it ! கதாபாத்திரம் மட்டும் தான். அவங்களுக்கு Harry Potter-னா, நமக்கு மகாபாரதம். குறைகளை தவிர்த்துவிட்டு நிறைகளை மட்டும் பார்த்தோம்-னா மகாபாரதம் ஒரு நல்ல fantasy கதை. எனக்கு கடவுள் நம்பிக...

Sacred games

Image
கணேஷ் காய்துண்டே :    " நான் தான் சொன்னேன்-ல்ல நீ திருப்பி வருவேன்-னு... சர்தாஜ் ! என் கதை ஒரு கருந்தேள் மாதிரி. அது உன்ன கொட்டிருச்சு. 'நான் எங்கிருந்து வந்தேன்?'-ன்ற கதையை நீ தெரிஞ்சிக்காத வரைக்கும், உன்னால இந்த மதக்குழப்பங்களை புரிஞ்சிக்கவே முடியாது "  கிட்டத்தட்ட 15 வருசம் முன்னாடி மும்பையை கட்டியாண்ட டான் தான் கணேஷ் காய்துண்டே. அவர் ஏன் தீடீர்னு ஒரு போலீஸ் அதிகாரிட்ட பேசனும்னு ஆசைப்படுறாரு ? 25 நாள்-ன்னு ஒரு கணக்கு சொல்றாறே அது என்ன ? தக்காளி யார் அந்த அமித் திரிவேதி ? இந்த மூன்று கேள்வியும் உங்கள கடைசி வரைக்கும் இந்த series-அ பார்க்க வைக்கும்-னு நான் நம்புறேன். இப்போதைக்கு 8 episode வந்திருக்குது. ஒவ்வொன்னும் ஏறக்குறைய 45 நிமிசம். ஒரே ஒரு episode பாருங்க. அதுலயே தெரிஞ்சுடும் நீங்க இதுக்கு சரிப்பட்டு வருவீங்களா மாட்டீங்களா-ன்னு.  வன்சொற்கள், வன்முறைக் காட்சிகள்-னு எல்லாமே உண்டு. நுரையீரல் மட்டுமில்ல உங்க இதயமும் பஞ்சு போன்றது-னா சத்தியமா பார்க்காதீங்க. சமீபத்துல வந்து மிரட்டுன Netflix series தான் 'Sacred Games'. இந்த சீரியஸ், இதே பெயரில்...

The earth = Pale blue dot

Image
கார்ல் சாகன் ( Carl Sagan ) யார் என்று தேடித் தெரிந்து கொள்ளவும். கூடவே அவரை ஏன் ' Mr.X ' என்று அழைக்கிறார்கள் ? என்பதையும் தேடித் தெரிந்து கொள்ளவும்.              பட உதவி  : https://abhishake.wordpress.com/2013/10/07/alone-with-everybody/ ( பூமியிலிருந்து 6.4 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் ) இங்கிருந்து பார்ப்பவர்களுக்கு, பூமி அவ்வளவு ஈர்ப்புள்ள ஒன்றாய் தோன்றாமல் போகலாம். ஏனெனில் பூமி அவர்களுக்கு, ஒரு சிறிய மங்கலான நீலப்புள்ளியாகவே தெரியும். ஆனால் நமக்கு பூமி அப்படியானது அல்ல. முற்றிலும் வித்தியாசமான ஒன்று. மீண்டும் ஒருமுறை அந்த மங்கலான நீலப்புள்ளியை பாருங்கள். அதுதான் நம் வீடு. அங்குதான் நாம் இருக்கிறோம். உங்களுக்கு பிடித்தவர்கள், தெரிந்தவர்கள், இதுவரை கேள்விப்பட்டவர்கள் என அது எந்த மனித உயிராக இருந்தாலும், அவர்கள் அங்கேதான் தங்களின் வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். இன்பங்கள், துன்பங்கள், ஆயிரக்கணக்கான மதங்கள், சித்தாந்தங்கள், பொருளாதார கோட்பாடுகள், உழைத்து வாழ்பவர்கள், ஏமாற்றி வாழ்பவர்கள், வீரர்கள், கோழைகள், நாகரி...