Sacred games

கணேஷ் காய்துண்டே :  " நான் தான் சொன்னேன்-ல்ல நீ திருப்பி வருவேன்-னு... சர்தாஜ் ! என் கதை ஒரு கருந்தேள் மாதிரி. அது உன்ன கொட்டிருச்சு.
'நான் எங்கிருந்து வந்தேன்?'-ன்ற கதையை நீ தெரிஞ்சிக்காத வரைக்கும், உன்னால இந்த மதக்குழப்பங்களை புரிஞ்சிக்கவே முடியாது " 


கிட்டத்தட்ட 15 வருசம் முன்னாடி மும்பையை கட்டியாண்ட டான் தான் கணேஷ் காய்துண்டே. அவர் ஏன் தீடீர்னு ஒரு போலீஸ் அதிகாரிட்ட பேசனும்னு ஆசைப்படுறாரு ? 25 நாள்-ன்னு ஒரு கணக்கு சொல்றாறே அது என்ன ? தக்காளி யார் அந்த அமித் திரிவேதி ? இந்த மூன்று கேள்வியும் உங்கள கடைசி வரைக்கும் இந்த series-அ பார்க்க வைக்கும்-னு நான் நம்புறேன்.

இப்போதைக்கு 8 episode வந்திருக்குது. ஒவ்வொன்னும் ஏறக்குறைய 45 நிமிசம். ஒரே ஒரு episode பாருங்க. அதுலயே தெரிஞ்சுடும் நீங்க இதுக்கு சரிப்பட்டு வருவீங்களா மாட்டீங்களா-ன்னு.  வன்சொற்கள், வன்முறைக் காட்சிகள்-னு எல்லாமே உண்டு. நுரையீரல் மட்டுமில்ல உங்க இதயமும் பஞ்சு போன்றது-னா சத்தியமா பார்க்காதீங்க.

சமீபத்துல வந்து மிரட்டுன Netflix series தான் 'Sacred Games'.




இந்த சீரியஸ், இதே பெயரில் (Sacred games ) வெளிவந்த புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது. புத்தகத்தை எழுதியவர் விக்ரம் சந்திரா.
விக்ரமாதித்தா மோத்வானி, அனுராக் கஷ்யப் -ன்னு ரெண்டு பேரு இந்த series-அ இயக்கி இருக்காங்க. அனுராக் கஷ்யப் யாருன்னு கேட்டிங்கன்னா 'இமைக்கா நொடிகள்' படத்தோட வில்லன் தான் இந்த அனுராக் கஷ்யப் ( ருத்ரன் ). இந்த சீரியஸ்-அ நான் பாக்குறதுக்குக்கான இரண்டாவது காரணம் இவர்தான். முதற்காரணம் யார்னு கேக்குறீங்களா ? நவாசுதீன் சித்திக். நடிக்க சொன்னா மனுசன் வாழ்ந்துட்டு போய்ருக்காப்ல. விருப்பம் இருக்குறவங்க gangs of wassepur பார்க்கலாம். அதுலயும் நவாசுதீன் தான் ஹீரோ. டேரக்டர் அனுராக் கஷ்யப்.

இந்த சீரியஸ் ஓட தனிச்சிறப்பு என்னனா கதாபாத்திரங்கள் தான். ஒவ்வொருத்தரும் செம்மயா பண்ணுருக்காங்க. அது போலீஸா நடிச்சிருக்கிற சாய்ஃப் அலிகான், கணேஷ் காய்துண்டே-வா நடிஞ்சிருக்கிற நவாசுதீன், ராதிகா ஆப்தே, குக்கூவா நடிச்சிருக்கிற குப்ரா சைத், கான்ஸ்டபிளா நடிச்சிருக்கிற ஜிடேந்திரா ஜோஷி -ன்னு எல்லாருமே வேற level - அ நடிச்சிருக்காங்க.

டைம் இருக்குறவங்க பாருங்க. நிச்சயமா உங்கள ஏமாற்றாது. நன்றி வணக்கம்.

---------------------------------------------------

காய்துண்டே : " என் கூட வந்துரு ? "

குக்கூ : எங்க ? " 

காய்துண்டே : " சொர்க்கத்துக்கு... "

குக்கூ :  " அந்த சொர்க்கமே நான் தான்... "

---------------------------------------------------
பட உதவி 🙏:

https://www.amazon.com/Sacred-Games-Vikram-Chandra/dp/014306360X

http://swerverepresents.com/gallery/jim-fiscus-entertainment/

Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்