Posts

Google india trends - 2018

Image
இந்த ஆண்டு முடியவிருக்கும் நிலையில், இந்தியர்கள் 2018-ம் ஆண்டில் அதிகமாக தேடியவை குறித்தான பட்டியலை கூகுள் இந்தியா வெளியிட்டுள்ளது. 2018-ம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து குறித்து இந்தியர்கள் அதிகமாக தேடியுள்ளனர். ஆளுமை கள் , திரைப்படங்கள், செய்தி கள் , விளையாட்டு கள் , பாடல்கள், அருகில் இருப்பவை குறித்த தேடல், ஒட்டுமொத்தமாக அதிகம் தேடியவை, 'என்ன ?' மற்றும் 'எப்படி ?' என்ற கேள்விகளுடன் தொடர்புடைய தேடல் கள் என ஒன்பது பிரிவுகளின் கீழ் இந்தியர் களின் தேட ல் களை கூகுள் இந்தியா பட்டியலிட்டுள்ளது. அதிகமாக தேடப்பட்ட ஆளுமைகளின் பட்டியலில், இந்தி நடிகை ப்ரியங்கா சோப்ரா-வை பின்னுக்குத் தள்ளி, மலையாள நடிகை ப்ரியா வாரியர் முதலிடம் பெற்றுள்ளார். ப்ரியங்கா சோப்ராவை மணந்த நிக் ஜோனஸ் இப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ப்ரியங்கா சோப்ரா நான்காம் இடம் பிடித்துள்ளார். அதிகமாக தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த '2.0' முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை, டைகர் ஷெராஃப் நடித்த 'பாஹி 2' மற்றும் சல்மான் கா...

உலகின் மிகச்சிறிய டைனோசர்

Image
உலகின் மிகச்சிறிய டைனோசரின் கால்தடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அ த ன் ஒவ்வொரு கால்தடமும் ஒரு சென்டிமீட்டர் நீளத்தில் இருக்கின்றன.                                           source மாமிசம் உண்ணும் இச்சிறிய டைனோசர், நம் கையில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறியது எனவும், ஒரு குருவி அளவில் இருக்கும் எனவும் கூறுகின்றனர். மேலும், தரையில் நடக்கக் கூடிய இதன் கால்கள் ஒவ்வொன்றும், ஒரு தீக்குச்சி அளவு உயர ம் இருக்கும் எனவும் கூறுகின்றனர். 110 மில்லியன் ஆண்டுக ள் பழமையான இ க் கால்தடம், தென்கொரியாவில் இருக்கும் ஒரு அகழ்வாராய்ச்சி தளத்தில் கண்டறியப்பட்டுள்ளது. கிடைத்த கால்தடங்கள், இ து ஒரு ராப்டராக இருக்குமென உணர்த்துகின்றன. தரையை நோக்கி இரண்டு கால்விரல்களையும், பூனையின் நகத்தைப் போல் உள்ளிழுத்த மூன்றாவது கால்விரலையும் இது கொண்டுள்ளது. இருந்தும் இக்கால்தடங்கள் குட்டி டைனோசர்களுக்கு உரியதா ? முதிர்ந்த ராப்டார்களுக்கு உரியதா ? என்பதை மட்டும் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உறுதி...

முதல் கார் விளம்பரம்

Image
ஆம். செயற்கை நுண்ணறிவு (Artficial Intelligence) திரைக்கதை எழுதிய முதல் விளம்பரம். ஐ.பி.எம்-ன் செயற்கை நுண்ணறிவு இயந்திரமான (Artificial intelligence) வாட் ச ன் தான் இவ்விளம்பரத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளது. 2000-ம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற ''ஒன் டே இன் செப்டம்பர்" இயக்கிய கெவின் மெக்டொனால்டு (Kevin MacDonald) இவ்விளம்பரத்தை லெக்சஸ் (Lexus) கார் நிறுவனத்திற்காக இயக்கியுள்ளார்.                                                                            source படைப்பாற்றலுக்காக கேன்ஸ் விருது பெற்ற பதினைந்து வருடகால விளம்பரங்களும், பொருள், இடம், செயல்பாடு மற்றும் உணர்ச்சிகள் குறித்து காட்சி வழி ஆழமான புரிதல் பெறும் நிரல் நெறிமுறைகள் (Visual deep learning algorithm) சேகரித்த தரவுகளும் வாட்சனுக்கு உள்ளீடாய் தரப்பட்டன. மேலும் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகமான நியூ சவு...

நடக்கும் மீன் (Walking Fish)

Image
நீ சொல் ! மீன்கள் யாவும் நடக்க பழகிக்கொள்ளும். நீ சொல் ! விண்மீன் யாவும் நிலவாய் மாறி நிற்கும் நீ சொல் ! செல்கள் யாவும் மின்னலாய் அரும்பி மின்னும் ~ அரன் 🤯 ===================== 'மீன்கள் யாவும் நடக்க பழகிக்கொள்ளும்' ~ எ ன்ற வரிக்கு பொருத்தமான புகைப்படத்தை தேடும் போது கண்ணில் சிக்கியது தான் இந்த ‘மெக்சிகன் நடக்கும் மீன்’ (Mexican Walking Fish) . source பெயரில் 'மீன்' இருந்தாலும், இது பல்லி வகையைச் சார்ந்தது. இது 'மெக்சிகன் சாலமந்தர்' என்றும் அழைக்கப்படுகின்றது. இதன் இயற்பெயர் ஆக்ஸலோட்டல் (Axolotl) . இதன் தாயகம் மெக்சிகோ . நடக்கும் மீன் : ஒரு காலத்தில் பல்கி பெருகி இருந்தவை,  இன்று மெக்சிகோவில் இருக்கும் கோச்சிமில்கோ (Xochimilco Lake) என்ற ஏரியில் மட்டுமே காணப்படுகிறது. 2006-ம் ஆண்டு அருகி வரும் உயிரினங்களின் (Endangered) பட்டியலில் இது சேர்க்கப்பட்டது. மெக்சிகோவில் வாழ்ந்த பழங்குடியினர் இதனை தெய்வமாக வழிபட்டதாய் புராணங்கள் கூறுகின்றன.  முப்பது சென்டிமீட்டர் வரை வளரக்கூடியது. பதினைந்து வருடங்கள் வாழக்கூடியது. பெயர் காரணம் : Axolo...

புறநானூறு - 194

புறநானூறு - 194 வது பாடல் விளக்கம் :  இந்த உலகம் எப்படி பட்டதாம் ? அதன் இயல்பை உணர்ந்தோர் எதை காண்பராம் ? ஒரு வீட்டில் சாவிற்கான பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில் மகிழ்ச்சி தரும் முழவின் சங்கீதம் ஒலிக்கிறது. ஒரு வீட்டில் மணமக்கள் பூமாலை சூடி மகிழ்கிறார்கள். மற்றொரு வீட்டிலோ உயிர் பிரிந்த துணையினால், தலைவி மையிட்ட கண்களில் நீர் கோர்த்து துன்புற்று வாடுகிறாள். இப்படி இரண்டும் கலந்த இனிமையற்ற இவ்வுலகை படைத்தவன் நிச்சயமாக பண்பில்லாதவனே. இருந்தபோதும் இவ்வுலகின் இயல்பை உணர்ந்தோர் அதிலுள்ள இனியதை மட்டும் காண்பர்.  பாடல் :  ஓர் இல் நெய்தல் கறங்க,  ஓர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப், புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப, படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்! இன்னாது அம்ம, இவ் வுலகம்; இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே.                                                  ~ பக்குடுக்கை நன்கணியார்   சொல...

நினைவக மரபணு (DNA data storage)

Image
கட்டுரை ஒருபக்கம் இருக்கட்டும்‌. முதலில் இந்த காணொளியைக் காணுங்கள். கருப்பும் வெள்ளையுமாக இருக்கும் ஒரு காணொளி. அவ்வளவு தானே ! இந்த காணொளியில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ? இந்த காணொளி தான் சிறப்பே. இது செயற்கை மரபணுவில் (Synthetic DNA) சேமிக்கப்பட்ட முதல் காணொளி. மேலும் இது, மனிதகுல பாரம்பரியத்தின் முக்கியமான வரலாற்றுப் பொருட்களை பாதுகாக்கும் யுனெஸ்கோவின் மெமரி ஆஃப் தி வேல்டு (UNESCO - Memory of the world) திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். ஒரு காலத்தில் கற்கள், ஓலைச்சுவ டியில் எழுதிக் கொண்டிருந்த மனித குலம் இன்று கைரேகையை விட ச் சிறிதான மெமரி கார்டில் சேமிக்கும் அளவு முன்னேறி இருக்கிறோம் என்பது முற்றிலும் ஆச்சரியமான நிதர்சன உண்மை. நினைவக சேமிப்பின் அடுத்த பரிமாணம் தான் நினைவக மரபணு. இயற்கை மரபணு : மனித செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து தகவல்களும் மரபணுவில் சேமிக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதனின் கண்களின் நிறம், தோலின் நிறம், பரம்பரை நோய் என யாவும் மரபணு வின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. நம் மரபணு நான்கு மூலக்கூறுகளால் ஆனது. ...