Posts

Showing posts from August, 2018

Time travel

" சொன்னா சொன்னது தான் " " ........ " " ........................." "இந்த மூளை செயல்பட்ற விதமே அற்புதமானது-ங்க. எப்பவோ ? எங்கயோ ? கேட்டத ஞாபகத்துக்கு கொண்டு வருது. மறுபடியும் எங்கிருந்தோ தேடி கண்டுபுடிச்சு அது நடந்தது எங்க ? எப்ப ? -ன்றதையும் சொல்லுது. இது போதாதுன்னு உள்ளயும் இழுத்துட்டுப் போகுது. " " ....................................... " " ........................." ( Memory buffering....Sorry for the inconvenience ) நரேஷ் : " என்ன ணா சாப்டாச்சா ? " காசி : " மெதுவ்வா...சாப்புடுவோம்....என்ன அவசரம் ? இப்ப தான் டீ சாப்ட்டேன் " வாங்குபவர் : எள்நீ எவ்ளோ-ணே ? காசி : " முப்பது...நாப்பது‌..." வாங்குபவர் : " தண்ணி நெறயா இருக்குற மாரி முப்பது-ல ஒன்னு குடுங்க " ( எதிரே இருந்த மேன்சனில் இருந்து splendor-ல் வந்த ஒருவர், காசி அண்ணாவுக்கு ஒரு கையால் வணக்கம் சொல்லிவிட்டு செல்கிறார். ) நரேஷ் : "  யார் ணா அவரு ? உங்களுக்கு வணக்கம் சொல்ட்டு போறாரு. "...

West ? or East ?

Image
பச்சை வண்ண சாய்வெழுத்துகளை (Green italics) மனதின் அசரீரி எனக் கொள்க.  BOOM. " யோவ் ! சீக்கிரம் Bill-அ குடுயா. அய்யோ, இவ்ளோ வேகமா Road-அ cross பண்றாளே ! Athlete- ஓட பொண்ணா இருப்பாளோ ? ( Grandma voice : ஓடுகாலிப்பய மவ ! ). முகத்த வேற பாக்கலயே ! "  விளக்கம் : ஓடுகாலி = ஓடு + கால் + இ ஓடும் கால்களைக் கொண்டவள்/ன். ( Thank you Wiktionary. ) பில் பைசல் செய்யப்பட்டுவிட்டது. கால்கள் neutral-லில் இருந்து வேகம் எடுக்கின்றன. " இது வேற ! Push -ஆ ? Pull -ஆ ? தெர்லயே ? First இந்த கதவ ஒடைக்கணும் டா... Office -ல தான் இந்த கதவ வச்சு லூட்டி பண்றானுக-ன்னா நீங்களுமாடா ? போங்கடா ! அய்யோ அவ வேற cross பண்ணிட்டாளே ! " " Freeze. இப்ப நாம road-அ cross பண்ணப்போறோம். So, Please be careful. Ok ? " " Cross பண்றதுக்கு முன்னாடி, philosophy 1-க்கும் philosophy 2-க்கும் உள்ள வித்தியாசத்த பா(ர்) த்துருவோம் " Dream. Work. Achieve.  When you walk, Just walk. Scenario இது தான். இப்ப அந்த Angel ( ஆமா ! இனிமே Angel தா...

பேரலையின் பெயர் ஜெயகாந்தன்

Image
ஜெயகாந்தனின் நினைவஞ்சலி குறித்த இரண்டு மணிநேர காணொளி ஒன்று காணக் கிடைத்தது. நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாக சொன்ன பதில்களை அக்காணொலியில் இருந்து இங்கே எழுத்தாக்கம் செய்திருக்கிறேன்.  (தம்பி Google Voice... அந்தப்பக்கம் ஓரமா போ...) நிருபர் : " உங்களுக்கு நிலையான கருத்தே இருக்கமுடியாது என்பது என் கருத்து. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? " ஜேகே : " எனைப் பற்றிய உங்களின் இந்த கருத்துக் கூட நிலையாக இருக்காது என்பது என் கருத்து " ( அதுதான் ஜெயகாந்தன் ) நிருபர் : " உங்களுக்கு ஞானபீட விருது  கிடைச்சிருக்கு. இதப்பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க ? " ஜே.கே : " நான் சின்னப்பையனா இருக்குறப்போ, எங்க வீட்டுக்கு எங்க மாமா வந்திருந்தாரு...வந்தவர் புதுசா சட்டை ஒன்னு வாங்கி வந்திருந்தாரு. அந்த சட்டையை எங்ககிட்ட காட்டி, 'யாருக்கு வேணும் ?'-னு கேட்டார். எங்க வீட்டுல ஏற்கனவே அப்ப குழந்தைங்க ஜாஸ்தி. எல்லோரும்... எனக்கு...எனக்குன்னு கை தூக்குனாங்க. நான் மட்டும் கை தூக்கல . 'நீ ஏன் கை தூக்கல ?'-ன்னு எங்க ம...

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்

Image
மல்லாக்கப் படுத்துட்டு அப்டியே யோசிட்டு இருந்தப்ப, தமிழ்ல இருக்குற மாதிரி English-ல ஓரெழுத்துச் சொற்கள் ஏதாவது இருக்கான்னு தேடிப்பார்த்தேன்.  எனக்கு தெரிஞ்சு இல்ல.  (இருந்தா சொல்லுங்க மாத்திப்போம்) தமிழ்-ல இருக்குற ஓரெழுத்துச் சொற்கள் மட்டும்  42   க்கும் மேல. தமிழின் முதல் எழுத்து 'அ' கூட ஒரு ஓரெழுத்து சொல் தான். ஓரெழுத்துச் சொல் என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம். நான் சிந்திக்கிறேன், ஆகையால் நான் இங்கு இருக்கிறான் ( I think, therefore I am ~ René Descartes )‌ 'சிந்தனை' என்பதன் பொருளை படிப்பவர்களுக்கு உணர்த்த நான்கு எழுத்துக்கள் சேர்ந்து நிற்கவேண்டி இருக்கிறது. தமிழில் சில எழுத்துக்கள் உண்டு. அவை தன்னந்தனியே நின்று ஒரு அர்த்தத்தைத் (meaning)  தந்து, 'Thug' காட்டிவிட்டு போகும். அவை தான் ' ஓரெழுத்துச் சொற்கள்' . தமிழில் உயிரெழுத்துக்கள் 12. அதில் 11 எழுத்துக்கள் ஓரெழுத்துச் சொற்கள்.  ( Ben-Hur ) 'ஓ'  மட்டும் கிடையாது . ( Ben-Hur படம் ஞாபகம் வருகிறதா ? Oscar-ல் 12 பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு 11 வ...

Quora பதில்கள்

Image
வணக்கம் வந்தனம். Quora-வில் படித்ததை இங் கே நான் மொழி பெயர்த்திருக்கிறேன். அறிவிப்பு : அடைப்புக்குள் (Brackets) இருப்பவைகளை அசரீரியின் குரல் எனக் கருதிக் கொள் ளவும் ( அசரீரி - ஒரு உடலற்ற உயிர், அரூபி ) சில உளவியல் உண்மைகள் உங்களுக்காக : நீங்கள் அதிகமாக மதிக்கும் ஒரு நபர் தான் உங்களுக்கு அதிகபட்ச துன்பத்தையும் தருகிறார். இரண்டில் ஒன்று உங்களை மாற்றும்.                1. வாழ்க்கையில்  போதுமான அளவு கல்வி (இயற்கை, மனிதர்கள், சக உயிர்கள் என அனைத்திடம் இருந்தும்)               2. போதுமான அளவு  கஷ்டங்கள். சிலசமயம், இதழ்களை விட கண்கள் அதிகமாய் பேசும் . யார் உங்களை பாதாளத்திற்கு இழுக்க முயல்கிறார்களோ, அவர்கள் ஏற்கனவே பாதாளத்தில் தான் இருக்கிறார்கள். ( வீணாய் அவர்களை எதுவும் செய்ய வேண்டாம். அவர்களே அவர்களை பார்த்துக் கொள்வார்கள். ) உங்கள் உணர்வுகள் (feelings)  ஆழம் ஆக ஆக, அதை வெளிப்படுத்துவதும் மிக மிகக் கடினம். ( ஆழ்கடலுக்கு ள்ள போக போ...

மாறாத மாற்றம்.

Image
ஜென் கத ஒன்னு. குட்டியோண்டுதான் இருக்கும். " இந்த சீடன் இருக்கனே இவன்... " "...ம்... " " ரொம்ப நாளா....இல்லல்ல... ரொம்ப வருசமா அந்த சென் வாத்தி பேசுறத கேட்டுட்டு இருந்துருக்காம். " "....." " தக்காளி ஒன்னும் அவன் மண்டைல ஏறல-ங்கேன். " "..." " பொறுத்து பாத்தான் " "கோட்டி அப்பறோம் ஒருக்க அந்த வாத்திட்ட கேட்டுட்டு பாத்துக்க... " "..." (" யோவ் ! / குருநாதா ! " ) ??? -> " SORRY TO INTERRUPT. உங்களுக்கு என்ன கேக்குது ? " "..." " புத்(த)ம் புத்தம்-ங்கேல...முடிஞ்சா அத ஒரு வாக்கியத்துல சொல்லுன்னான். " "..." " அந்த (க்)குருப்பய... சொல்லிட்டாங்கேன்..." " என்ன சொன்னாங்கேட்டியா ? "..." " இங்க எதுதேன் மாறல ? -ம்னா " "அப்படியா சொன்னாம் ? இல்லியே ?" " மாற்றம் ஒன்னுதேன் மாறாதது .... இல்லல்ல... எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டது ன்னு சொன்னாவளோ ?... " "எது ...

எதுக்கு ப்ளாக் (Blog) ?

Image
வணக்கம். வந்தனம். ப்ளாக்- அ உருவாக்கிட்ட செரி. இப்ப என்ன எழுதப் போற ? Blog- அ உருவாக்குறத பத்தியே எழுதிறலாம்... கழுதய... எதுக்கு பிளாகர் (blogger) ?: ஒருவர், தன்னோட சிந்தனைகளையும் அனுபவங்களையும் இணையத்துல(internet) இருக்குற மற்றவரோட பகிர பிளாகர் பயன்படுது. கதை, கவிதை, பயணக் கட்டுரை, கணினி மொழிக் கட்டுரை, அதுஇது...தஷ்புஷ்... ன்னு ஏராளமான படைப்புக்கள உருவாக்க அனுமதிக்கிது. உருவாக்கம்: பைரா காப்ஸ் (Pyra Labs) -ன்ற நிறுவனம். 1999-ல பிளாகர்-அ உருவாக்கியது. இவான் வில்லியம்ஸ் (Ivan williams) & மெக் ஹீரிஹான் (Meg Hourihan)-ன்னு ரெண்டு பேரு இதோட நிறுவனர்கள் ~ By வி க்கிமூளை (Wikipedia). கவனத்திற்கு: நீங்க (User) ஒரே ஒரு கணக்கைப் பயன்படுத்தி 100 வலைப்பூக்களை (Blogs) உருவாக்கலாமாம். ஒரு நாள்ல வந்துபோகிற வாசகர்களின் எண்ணிக்கைய தான் அந்த ப்ளாக்/வெப்சைட்டோட போக்குவரத்துன்னு (traffic) சொல்லுவாங்க. சந்தேகம் 22: அப்ப ப்ளாக்குக்கும் இணையதளத்துக்கும் (Website) என்ன வித்தியாசம்-ன்னு கேட்குறீங்களா ? ப்ளாக், வாசகர்களை (readers) கருத்துகள் (comments) பதிவு செய்ய அனு...